தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்! பின்வாங்கிய காங்கிரஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு!
Lok Sabha Exit poll 2024 Congress announcement
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரக் கட்சி பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஆறு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதுவரை நடந்த தேர்தலில் அதிகபட்சமாக நான்காம் கட்ட தேர்தலில் 69.16 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது. ஏழம்பட்ட தேர்தல் 57 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.
ஜூன் நான்காம் தேதி ஏழு ஏழு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல், வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி (நாளை) மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
இந்த தடையை மீறி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை அண்மையில் வெளியிட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நடவடிக்கை எடுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரக் கட்சி பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஜூன் நான்காம் தேதிக்குப் பிறகு ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்போம் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நாளை மாலை வெளியாகும் நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
English Summary
Lok Sabha Exit poll 2024 Congress announcement