தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து! பறிபோன 3 உயிர்! போலீசார் விசாரணை!
Madhya Pradesh private bus accident
மத்திய பிரதேசம், உஜ்ஜைன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 40 பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜோத்பூருக்கு இந்தூரில் இருந்து சென்று கொண்டிருந்த பேருந்து வளைவு ஒன்றில் திரும்பிய போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து மாவட்ட தலைமையகத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்ததாக கச்ரோட் காவல் நிலைய பொறுப்பாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் நடத்துனர் உட்பட 2 பேர் பேருந்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
மேலும் இந்த விபத்தில் 8 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட த்தி வருகின்றனர்.
English Summary
Madhya Pradesh private bus accident