மனைவியைக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற காதல் கணவர்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கெளரி மகள் ரோஜா. இவர் பொள்ளாச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் ஷெரிப், சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால், ரோஜா தனது தாயுடன் திருப்பூர் சென்று அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். 

அப்போது ரோஜாவுக்கு கோவையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில காலமாக தம்பதியிடையே குடும்ப சண்டை ஏற்பட்டதனால் ரோஜா, தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு, குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு புதுச்சேரி வந்து தாயுடன் தங்கியிருந்தார். 

இந்நிலையில், நேற்று காலை புதுச்சேரிக்கு வந்த விக்னேஷ், தனது மனைவியைப் பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த ரோஜாவிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு ரோஜா மறுப்புத் தெரிவித்ததனால், தம்பதியினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கு அவர் மறுக்கவே தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால், ரோஜா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிந்தார். இதைத் தொடர்ந்து, விக்னேஷும் தன்னைத் தானே கழுத்தில் கத்தியால் கிழித்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், படுகாயமடைந்த விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து போலீஸாருக்கும் தகவல் அளித்தனர். அதன் படி, விரைந்து வந்த போலீஸார், ரோஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sucide attempt after killl wife in puthuchery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->