பீகார் : கார் மோதியதில் வைப்பரை பிடித்து கெஞ்சிய முதியவர்.! உடல் நசுங்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள பாங்க்ரா கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கர் சவுதூர். இவர் சைக்கிளில் பாங்க்ரா சவுக் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, கார் ஒன்று மோதியது. 

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் காரில் உள்ள வைப்பரைப் பிடித்து கொண்டு தொங்கினார். இதைத்தொடர்ந்து காரை நிறுத்துமாறு சத்தம்போட்டு கெஞ்சினார். ஆனால் அந்த நபர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக இயக்கிச் சென்றுள்ளார். 

இதைப்பார்த்த அப்பகுதியில் உள்ள மக்கள் காரைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்ட அந்த கார் ஓட்டுனர், கோட்வாவில் உள்ள கடம் சவுக் அருகே காரை நிறுத்தினார். 

இதில், காரில் தொங்கியபடி இருந்த சங்கர் சவுதூர் கீழே விழுந்ததில், அவர் மீது கார் ஏறி இறங்கியது. இதில் பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை கைப்பற்றினர், ஆனால், அதற்குள் கார் ஓட்டுனர் மற்றும் காரில் இருந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். மேலும், போலீசார் கார் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near bihar old man died for car accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->