22 பேருக்கு புதிய வகை ஜே.என்.1 கொரோன தொற்று உறுதி! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை ஜே.என்.1 கொரோன வைரஸ் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்கள் தடுப்பூசி போட்டிருதாலும், அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நாடுகளின் அரசு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 640 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 2,997 ஆக அதிகரித்துள்ளநிலையில் புதிய வகையான ஜே.என்.1 வகை கொரோனா தொற்று 22 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில சுகாதாரத் துறைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோன தொற்று திடீரென அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு முழு மரபணு வரிசைப்படுத்துதலுக்கான அனைத்து சோதனைகளையும் நோயாளிகளுக்கு செய்யவும், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, குஜராத், தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று திடீரென உயர்ந்துள்ளதால் கண்காணிப்பு துரிதத்தப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new type JN1 corona infection was confirmed for 22 people in india


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->