பிரதமர் மோடியின் படிப்பு சர்ச்சை! வழக்கு தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் படிப்பு? சான்றிதழ் கோரி வழக்கு தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் கல்லூரி படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) அளிக்க தேவையில்லை என்று, குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

கடந்த 2014 முதல் பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்தது, இது குறித்து 2016ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், தகவல் ஆணைத்திடம் விவரம் கேட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.

இதை தொடர்ந்து, முதல்வர் கெஜ்ரிவால் கேட்ட விவரங்களை வழங்கும்படி டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு தகவல் ஆணையர் உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதனோடி, பிரதமர் நரேந்திர மோடியின் முதுகலை பட்டம், சான்றிதழ் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரி மற்றும் குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் வழங்குமாறு தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழின் விவரங்களைக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Education issue court fine to Arvind Kejriwal 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->