மொத்தம் 9 நாள் பொங்கல் விடுமுறை! கடைசி நேரத்தில் வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி வரும் 16, 17-ம் தேதிகள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே புதுச்சேரியில் வரும் பொங்கல் விடுமுறை தினங்கள் வரும் 14 மற்றும் 15 தேதிகள் மட்டும் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உத்தரவுப்படி வரும் 16 மற்றும் 17-ம் தேதிகள் உழவர் திருநாளுடன் பொங்கலை கொண்டாட விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளன. 

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விடுமுறைக்கு மாற்றாக வரும் பிப்ரவரி 1 மற்றும் 8-ம் தேதிகள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக பார்த்தால் நாளை முதல் வரும் 19 ஆம் தேதிவரை 9 நாட்கள் விடுமுறை (பள்ளிகளுக்கு) அளிக்கப்பட்டு உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry pongal leave 2025


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->