பரபரப்புக்கு மத்தியில் மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி - காரணம் என்ன?
ragul gandhi going to manipur
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கலவரம் வெடித்தது. ஓராண்டை கடந்தும் இந்த மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தற்போதும் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில் மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்ல இருக்கிறார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் செல்லும் இவர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளார். மேலும், வன்முறையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
English Summary
ragul gandhi going to manipur