சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்க முடியுமா? ராகுல் காந்திக்கு சாவர்க்கர் பேரன் சவால்.! - Seithipunal
Seithipunal


குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசிய வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் காரணமாக அவரின் மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து ராகுல் காந்தி, சாவர்க்கரை அவமதித்துவிட்டதாக பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காண்பிக்க வேண்டுமென ராகுல் காந்திக்கு சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, சாவர்க்கர் இல்லை என்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறி வருகிறார். சாவர்க்கரை மன்னிப்பு கேட்டதை நிரூபித்து காண்பிக்க வேண்டும் என அவருக்கு சவால் விடுகிறேன். 

மேலும், தேச பக்தர்களின் பெயர்களை உங்களுடைய அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவது தவறானது மற்றும் வருந்தத்தக்கது. மேலும் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savarkar grandson challenge to Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->