பி.எம் கேர் திட்டத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு! முடிவை அறிவித்தார் மோடி! - Seithipunal
Seithipunal


முன்னாள் நீதிபதி, முன்னாள் துணை சபாநாயகர்,ரத்தன் டாட்டா சன்ஸ் குழும தலைவர் பி.எம் கேர் நிதியத்தின் புதிய அறங்காவலர்கள்!

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிரதமர் மோடியின் பிஎம் கேர் திட்டத்தை நிதி அமைச்சர் அறிவித்தார். கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க நாடு முழுவதும் இத்திட்டம் உதவியது. இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் சமூக அமைப்புகள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் நிதி அளித்தனர்.

பிரதமர் பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பிஎம் கேர் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருந்து வந்தனர். 

நேற்று பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் அறங்காவலர்கள் மற்றும் நிதியத்தின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கே.டி தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முன்டா மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோர் பிஎம் நிதியத்தின் புதிய அறங்காவலர்களாக நியமனம் செய்ய ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. 

பிரதமர் மோடி பேசுகையில் புதிய அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பங்களிப்பு பிஎம் கேர்ஸ் நிதியின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்தும் என பெருமையுடன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selection of new administrators of PM care program


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->