தெலங்கானா தோ்தல்: கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் அதிகாரி, சோதனையின் போது ரூ. 669 கோடி மதிப்பிலான பணம், மதுபானம், தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்று தெரிவித்துள்ளார். 

தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் அதிகாரி, மாநிலம் முழுவதும் 35,655 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில் சுமார் 60 ஆயிரம் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரங்கள் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு வாகனங்களின் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும். 

இதனால் ஒவ்வொரு வாகனத்தையும் அதிகாரிகளால் கண்காணிக்க முடியும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தும் வகையில் மக்களுக்கு இலவசங்கள் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இருப்பினும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 669 கோடி மதிப்பிலான பணம், மதுபானம், தங்கம் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Election Crores of seized money property


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->