தெலுங்கானா தேர்தல் எதிரொலி: அரசியல் கட்சியினரிடம் இருந்து சுருட்டிய ரூ.3.68 கோடி மது பாட்டில்கள்!
Telangana Election Rs 3Crore Liquor Bottles seized
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தெலுங்கானாவில் உள்ள அரசியல் கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு பரிசு பொருட்கள் மற்றும் மதுபானங்களை ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளனர்.
அவ்வாறு பதுக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் மது பானங்களை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறக்கும் படைகள் மூலம் தணிக்கையில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ. 3.68 கோடி மதிப்பிலான மது பாட்டில்கள் ரூ. 3.17 கோடி ரொக்க பணம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுவரை தெலுங்கானாவில், போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 347.16 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Telangana Election Rs 3Crore Liquor Bottles seized