நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த தெலுங்கானா முன்னாள் முதல்வர்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தனது வீட்டில் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

69 வயதான இவர் தடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் கடந்த 3 நாட்களாக கட்சி பிரமுகர்கள் மற்றும் பலரை தனது இல்லத்தில் சந்தித்து வந்தார். 

கடந்த 2014 முதல் 2023 வரை தெலுங்கானாவில் ஆட்சி செய்து வந்த இவரை காங்கிரஸ் வீழ்த்தியது. இதனை அடுத்து தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக நேற்று காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். இவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Ex cm Chandrasekhar Rao hospitalised


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->