தாண்டவம் ஆடும் கொரோனா - கேரளாவில் 3 பேர் பலி - 292 பேருக்கு தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரைக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தின் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தற்போது 2,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

நாடு முழுவதும் நேற்று 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில், கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 72,056 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனிடையே மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஜேஎன்1 கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தலைமையில் இணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died and 292 peoples affected by corona in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->