திருப்பதியில் ஜனவரி மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜனவரி மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

உலக பிரசித்தி பெற்ற செல்வந்த கடவுள்களில் ஒன்றான ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், டோல் உற்சவம், பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம். 

மேலும் எலக்ட்ரானிக் குலுக்கலில் கலந்து கொள்ள சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளும் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் 14ம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு பதிவு செய்யலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today release Arjitha Seva tickets for the January month in Tirupati


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->