கரையை கடந்த பிபர்ஜாய் புயல் -  22 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கரையை கடந்த பிபர்ஜாய் புயல் -  22 பேர் படுகாயம்.!!

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையாக உருவான பிபர்ஜாய் புயல், கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் புயலாக வலுவடைந்தது. பின்னர் இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. 

சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த இந்த புயல் நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது. இதன் எதிரொலியாக நேற்று நண்பகலில் இருந்தே குஜராத்தின் கரையோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. 

புயல் கரையை நெருங்க நெருங்க குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்தக் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதேபோல், மின்கம்பங்கள் மற்றும் செல்போன் கோபுரங்களும் சரிந்தன. 

இந்த புயல் காரணமாக இதுவரைக்கும் 22 பேர் காயமடைந்துள்ளனர். 940 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 23 விலங்குகளும் பலியாகியுள்ளன. கனமழை மற்றும் பலத்த காற்றுடன் குஜராத்தில் பல்வேறு இடங்களில் 524 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty two peoples injured for pibarjai storm


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->