கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்..!!
Uttarakhand Governor approves Prohibition of Compulsory Conversion Act
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டாய மதமாற்று தடைச் சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் வகையில் உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்த சட்ட மசோதாவை ஆராய்ந்த ஆளுநர் இன்று கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் உத்தரகாண்டில் கட்டாய மதமாற்று தடைச் சட்டம் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரகாண்ட் மாநில அரசு கொண்டுவந்த கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் மூலம் ஒருவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் ரூ.50,000 அபராதமும், அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Uttarakhand Governor approves Prohibition of Compulsory Conversion Act