வீட்டிலேயே தீபாவளி பலகாரம் செய்யப் போறீங்களா.? தித்திப்பாக்கும் பலகாரங்கள்.! - Seithipunal
Seithipunal


தீபாவளி வந்திருச்சு.. எல்லா பெண்களும் பலகாரங்கள் செய்ய ஆரம்பிச்சாச்சா? எல்லோருமே ஏதவாது ஒரு பலகாரம் செய்வதில் எக்ஸ்பர்ட்டாக இருப்பீங்க. ஆனால் சில பலகாரங்களை எத்தனை முறை செய்தாலும் சரியான பக்குவத்திற்கு வரவில்லையே என்ற கவலையும் இருக்கும்.

அதற்கு சின்ன சின்ன டிப்ஸ்களை பின்பற்றினால் போதும். இதோ உங்கள் வீட்டுப் பலகாரங்களை கூடுதல் சுவையாக்க சில 

தீபாவளி பலகாரங்கள் சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, ஒரு சிறு துணியில், கைப்பிடி கல் உப்பை முடிச்சாக கட்டி, சம்படத்தின் அடியில் போட்டு வைக்கவும்.

லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ 'எசன்ஸை" விட்டு கலந்தால் சுவையும், மணமும் அனைவரையும் கவரும்.

பஜ்ஜி மாவில் சூடாக ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் கலந்து, பஜ்ஜி சுட்டால் வாசனையாய் இருக்கும்... எண்ணெய் அதிகம் குடிக்காது...

பலகாரம் செய்யும் முன் எண்ணெயில் இஞ்சி, வாழைப்பட்டை நசுக்கி போட்டு பொரித்து எடுத்த பின் உபயோகிக்க வேண்டும். இதனால் பலகாரம் எண்ணெய் குடிக்காது, பொங்கியும் வழியாது. எண்ணெய் புகையால் வாந்தி மற்றும் தலைசுற்றல் வராது.

அதிரசம் செய்யப் போகிறீர்களா? அந்த மாவுடன் கொட்டையில்லாத பேரீச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து அதிரசம் செய்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

எண்ணெயில் பொரித்த முறுக்கு, மிக்சர் போன்றவற்றை ஜல்லிக் கரண்டி அல்லது வடிதட்டில் எடுத்து வடித்து விட்டு, பிறகு டிஷ்யூ பேப்பரில் போடவும். எண்ணெய் பசை போனதும் பாலிதீன் கவரில் போட்டு வைத்தால், மிக்சரில் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் காரல் வராது. மொறு மொறுப்பும் நீடித்து இருக்கும்.

கடலை எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் சீக்கிரத்தில் பழைய வாசனை வராது.

குலோப்ஜாமுன் செய்யும்போது சர்க்கரைப் பாகிலேயே அதிக நேரம் ஊறினால் உடைந்து விடும்.

சிப்ஸ், காராபூந்தி ஆகியவற்றை தயாரிக்கும்போது காரத்திற்கு மிளகாய்த்தூள் சேர்ப்பதற்கு பதிலாக மிளகுத்தூள் சேர்க்கலாம். காரமும் குறைவாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

தீபாவளிக்கு உறவினர்கள், நண்பர்களுக்கு பெரும்பாலும் ஸ்வீட்டையே பரிசளிப்போம். எல்லோரின் வீட்டிலும் இனிப்பு அதிகமாக இருக்கும். இதை தவிர்க்க பழங்கள், உலர் பழங்கள், பருப்பு வகைகளை பரிசாக கொடுக்கலாம்.

முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சீடை போன்றவை மொறு மொறுப்பாக இருக்க சிறிது கார்ன் ஃபிளவர் மாவு சேர்த்து பிசைந்து செய்யலாம்.

நல்ல மொறு மொறுவென வரவேண்டிய ஸ்வீட், மெத்தென்று வந்தால் வாணலியில் நெய் விட்டு கிளறி, ஒரு கைப்பிடி சோள மாவு, அரிசி மாவு சேர்க்கவும். மொறு மொறுவென ஆகிவிடும். கடினமாக வந்தால் நெய் மட்டும் விட்டு கிளறி இறக்கினால் சாஃப்டாகி விடும்.

சிலருக்கு சீடை செய்யும்போது வெடித்து விடும். அதற்காகவே சீடை செய்வதை கைவிட்டு இருப்பார்கள். இனி சீடை செய்யும்போது, மாவினை சீடையாக உருட்டிய பிறகு, ஊசியால் சிறு துளையிட்ட பின் எண்ணெயில் பொரித்தால் வெடிக்காது.

தேங்காய் பால் முறுக்கு செய்ய மாவு பிசையும்போது சிறிது வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் கூடுதல் சுவையோடு முறுக்கு தயார்.

தட்டையின் சுவையினைக் கூடுதலாக்க மாவு பிசையும்போது வறுத்த வேர்க்கடலையை சேர்த்து செய்ய சுவை கூடுதலாக இருக்கும்.

உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது அதனுடன் இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து சேர்த்து அரைத்து தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் கட்லெட்டும் ரெடியாகி விடும்.

முக்கிய குறிப்பு : பலகாரங்கள் ஒரு வாரம், பத்து நாட்களுக்குள் தீரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கே தயாரியுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali special Sweet Recipe Tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->