நாதக நிர்வாகி கொலையில் "அமைச்சருக்கு தொடர்பா?" கொளுத்தி போட்ட அதிமுக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ்பாபு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர் குமார் கொலை வழக்கு உள்ளிட்ட15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ்பாபுவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். 

திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில் தெரிவித்து இருந்தார். திமுகவின் இந்த நடவடிக்கையை அதிமுக தரப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

அதிமுக ஐடி விங் மாநில செயலாளர் ராஜ் சத்யன் தனது சமூக வலைதள பக்கத்தில் " நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர் குமார் இரு தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார், அவரது குடும்பத்தினருக்கும் - கட்சியினருக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம் , நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலையில் திமுக ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ்பாபு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

வழக்கில் தொடர்புள்ள திமுக ஒன்றிய செயலாளர்க்கு திமுக கொடுத்துள்ள கொடும் தண்டனை என்னவென்று பார்த்தீர்களா? "தற்காலிக நீக்கம்"! அது சரி- திமுகவில் குண்டர்களை நிரந்தரமாக நீக்கவேண்டுமென்றால் கட்சியே இருக்காதே! மற்றொரு உண்மை தெரிந்தாக வேண்டும், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு, அமைச்சர் மனோ தங்கராஜ்  மீது இந்த கொலையை தூண்டியதாக குற்றம் சாட்டியது, அது குறித்து ஏதேனும் விசாரனை மேற்கொள்ளப்பட்டதா?" என பரபரப்பை கிளப்பியுள்ளார் ராஜ் சத்யன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK alleges minister is involved in ntk executive murder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->