ஆந்திரா மாநில அமைச்சர் மாரடைப்பால் காலமானார்.. அதிர்ச்சியிலும், வேதனையிலும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!!
andhra minister mekapati gautham reddy passed away
ஆந்திர பிரதேசம் மாநிலம் தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி இன்று மாரடைப்பால் காலமானார்.
அமைச்சர் கவுதம் ரெட்டி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் ஆத்மகூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அம்மாநில தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் முன்னாள் எம்பி ராஜமோகன் ரெட்டியின் மகன்.
கவுதம் ரெட்டி நேற்று துபாயில் இருந்து இந்தியா திரும்பினார். அதன் பிறகு அவர் ஆந்திரா திரும்பிய நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று அவர் திடீரென மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது கௌதம் ரெட்டி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவுதம் ரெட்டியின் மறைவுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆழ்ந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலத்திலிருந்தே தனக்குத் தெரிந்த இளம் நம்பிக்கைக்குரிய தலைவர், கவுதம் ரெட்டியின் மறைவு வேதனை அளிக்கிறது. மேலும், தனது அமைச்சரவையின் அமைச்சரின் இழப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
English Summary
andhra minister mekapati gautham reddy passed away