லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு.! போராட்டம்., போலீஸ்., ஹிஜாப்.!
Andra Loyola College Hijab
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை, கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்து இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இது சம்பந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை, அக்கல்லூரியின் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்து வெளியே அனுப்பியது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில், கல்லூரியில் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீருடை என்ற விதி அமலில் இருக்கும் நிலையில், ஹிஜாப் அகற்றிவிட்டு சீருடையில் வந்தால் மட்டுமே வகுப்புக்குள் செல்ல வேண்டும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவிகள் கல்லூரி எதிர்ப்புறத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அந்தப் மாணவிகளின் பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்துடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அந்த மாணவிகள் முதலாம் ஆண்டு முதல் ஹிஜாப் அணிந்து வருவதாகவும், தற்போது கல்லூரி நிர்வாகம் திடீரென ஹிஜாப் அணிய கூடாது என்று கூறுவது ஏன்? என்று எங்களுக்கு புரியவில்லை என்று மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
போலீசார் கல்லூரி நிர்வாகத்துடன் ஹிஜாப் அணிந்து மாணவிகள் செல்வதற்கு பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் கல்லூரி நிர்வாகம், "அனைத்து மாணவர்கள் போல இவர்களும் சீருடையில் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்" என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
இதனையடுத்து மாணவிகள் ஹிஜாப் தான் முக்கியம் என்று, கல்லூரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினர்.
English Summary
Andra Loyola College Hijab