பரபரப்பில் அரசியல் களம் - தேர்தலில் இருந்து விலகிய பாஜக வேட்பாளர்.!  - Seithipunal
Seithipunal


119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா சட்டசபைக்கு வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதனால், மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதன் படி பாஜக சார்பில், சந்திராயன் குட்டா தொகுதியில் சத்யநாராயணா முதிராஜ் போட்டியிடுவார் என்று கட்சி தலைமை அறிவித்திருந்தது. அவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், அவர் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து விலகுவதாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அவர் சில உடல்நலப் பிரச்சினைகளால் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சந்திராயன் குட்டா தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் அக்பரூதீன் ஓவைசி இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjb candidate withdraw telangana election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->