ஓரங்கட்டப்படும் காங்கிரஸ்., அடுத்தடுத்து இறங்கும் ஆப்புகள்., முக்கிய தலைவரை தட்டி தூக்கிய பாஜக.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறது.

மேலும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருப்பதால், எதிர் கட்சிகளின் தயவை நம்பி உள்ளது. குறிப்பாக மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பெரிதும் நம்பியிருக்கிறது.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜியோ, காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆளும் பாஜகவுக்கு எதிராக அமையக்கூடிய கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரசை தலைமை ஏற்க வைக்கவும், பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

அதன் ஒரு கட்டமாக அண்மையில் சரத்பவார் உடன் மம்தா பானர்ஜி சந்திப்பு அமைந்தது. அந்த சந்திப்பு நடந்து முடிந்த அடுத்த கணமே, பிரபல தனியார் தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகளின் தலைமைப் பொறுப்பை காங்கிரஸ்க்கு யாரும் குத்தகைக்கு விடவில்லை. அது அவர்களுக்கான உரிமை கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த பதிவு மம்தா பானர்ஜியின் பிரதமர் வேட்பாளர் கணக்குக்கு அடித்தளமிட்ட தாக அமைந்தது. இதற்கிடையே மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் இணைந்தனர். அதே சமயத்தில் பாஜகவும் தனது அரசியல் சதுரங்க வேட்டையை ஆடி வருகிறது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராணா குர்மித் சிங் சோதி பாஜகவில் இணைந்து உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Congress RanaGurmitSinghSodhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->