மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பாய்ந்தது வழக்கு!...போலீஸ் புகாரில் அதிரடி நடவடிக்கை!
Case against union minister kumaraswamy action taken on police complaint
அரசு ஊழியரை தனது பணியை செய்ய விடாமல் மிரட்டியதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களுருவில் சுரங்க வழக்கை விசாரிக்கும் போது, அரசு ஊழியரை தனது பணியை செய்ய விடாமல் மிரட்டியதாக காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி மீது புகார் அளித்துள்ளார்.
காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய அமைச்சசரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், சந்திரசேகரின் புகாரின் அடிப்படையில் குமாரசாமியின் மகன் நிக்கிக் குமாரசாமி உள்ளிட்டோர் மீது பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த 2006 முதல் 2008 ம் ஆண்டு வரை கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி இருந்தபோது, பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு 550 ஏக்கர் சுரங்க குத்தகைக்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Case against union minister kumaraswamy action taken on police complaint