எடப்பாடிக்கு லாக் போட்ட தயாநிதி மாறன்!...அவதூறு வழக்கில் ஆட்சேபம்! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தயாநிதி மாறன் தனது தொகுதியில் சிறப்பாக பணி செய்யவில்லை என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சிற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தொடர்ந்து இந்த  வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தயாநிதி மாறன் தரப்பில் வழக்கறிஞர் விவேகானந்தன், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று ஆட்சேபம் தெரிவித்து பதில்மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவில்,

பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா சட்டம் அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் காரணமாக இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கினை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dayanidhi maran who locked edappadi objection in defamation case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->