முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த மத்திய அரசு ஒப்புதல்.!
central government approved Corbivax preventive vaccine
பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசி தற்போது 12 முதல் 18 வயதுடைய சீறார்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளும் பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பரிசோதனை முடிவில், நோய் எதிா்ப்பாற்றல் அதிகரிப்பது தெரியவந்தது. இதன் பின்னர் இது தொடா்பான விவரங்கள் அனைத்தும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டது.
இதனை தொடா்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் முதல் இரண்டு தவணைககளாக கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டு செலுத்திக் கொண்டாலும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
English Summary
central government approved Corbivax preventive vaccine