காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியார்-மருமகள் வெற்றி.!!
congress candidate mother in law and daughter in law win
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
தற்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் 26-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சித்தேஸ்வரி (மருமகள்) மற்றும் 27-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பேபி (மாமியார்) வெற்றி பெற்றுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் 14 வார்டுகளில் திமுக, 3 வார்டுகளில் அதிமுக, 3 வார்டுகளில் சுயேட்சை, விசிக மற்றும் பாமக வேட்பாளர்கள் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் - திமுக 14, காங்கிரஸ் 1, மதிமுக 1, அதிமுக 3, சுயேட்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியில் 14 வார்டுகளில் திமுகவும், 3ல் சுயேட்சையும், அதிமுக, அமமுக, மதிமுக மற்றும் விசிக தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பேரூராட்சியில் திமுக 7 வார்டுகள், காங்கிரஸ் 4 வார்டுகள் , சுயேட்சை 3 வார்டுகள் மற்றும் அதிமுக 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 10 வார்டுகளில் அதிமுகவும், 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் திமுக 12 வார்டுகள், பாஜக 2 வார்டுகள், சுயேட்சை, மதிமுக மற்றும் காங்கிரஸ் தலா 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
English Summary
congress candidate mother in law and daughter in law win