#BREAKING:: பாஜகவில் இருந்து விலகுவதில் மகிழ்ச்சி.. தர்மபுரி, கிருஷ்ணகிரி கோட்ட பாஜக ஐடி விங் நிர்வாகி ராஜினாமா..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் அதிர்த்தியால் தமிழக பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில் அவர்கள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 

இதனால் அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருவதாக கோவில்பட்டியை சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அவரது உருவப்படத்தை எரித்தனர்.

அதேபோன்று அரியலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படம் அதிமுகவினரால் எரிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. 

மேலும் தமிழக பாஜக மற்றும் அதிமுக இடையிலான கருத்து மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நாட்டா கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை திறந்து வைத்து பேசிய அவர் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என பேசி இருந்தார். இதனால் பாஜக நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். தேசிய தலைவரின் வருகைக்கு பிறகு தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெ.பி நட்டா வருகை புரிந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட கோட்ட பாஜக ஐடி விங் பொறுப்பாளர் பாக்யராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சமூக ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு கோட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும் பாஜகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கிறேன்.

தம்பி திரு.அண்ணாமலை அவர்களுக்கு சகோதரர் திரு.சி.டி.ஆர் நிர்மல் குமார் அவர்களின் வளர்ச்சி பாஜகவிலும் சமூக ஊடகங்களிலும் தன்னைவிட அபரிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார் ஏனென்றால் தன் இடத்திற்கு வந்து விடுவார் என்ற அச்சம்.

தம்பி திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த மாதம் டெல்லி செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஐடி விங், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டதினால் தங்களுக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம், பண்பு, அன்பு, பாசம், தெளிவு மற்றும் அரசியலுக்கான சகிப்புத்தன்மை உள்ள சி டி.ஆர் நிர்மல்குமார் அவர்களின் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக பாஜகவில் இருந்து விலகும் நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது தொடர்கதையாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Krishnagiri Division BJP IT Wing Admin quits from BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->