இல்லாமை இருளை விலக்கி, இன்ப ஒளியை தீபஒளி நிறைக்கட்டும் - மருத்துவர் இராமதாஸ் வாழ்த்துச் செய்தி! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள தீபஒளி வாழ்த்துச் செய்தி : மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

தீபஒளி திருநாள் கடந்த இரு ஆண்டுகளாக மக்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்க வில்லை. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கொரோனா பெருந்தொற்று சூறையாடியிருந்தது தான் அதற்கு காரணம் ஆகும். கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழ்நாடு முழுமையாக மீண்டு விட்ட நிலையில் இந்த ஆண்டு தான் தமிழக மக்களிடம் தீப ஒளியை வரவேற்கும் மகிழ்ச்சி தென்படுகிறது. இந்த மகிழ்ச்சி இனிவரும் காலங்களில் பெருமகிழ்ச்சியாக பெருக வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் சமூகநீதிக்கும் சறுக்கல்கள் ஏற்பட்டன. மக்கள் முன்னேறவும், சமத்துவத்தை உண்டாக்கவும் சமூகநீதி மிகவும் அவசியமாகும். சமூகநீதியின் ஒளியை சதிகார கூட்டத்தின் கைகள் தடுத்து நின்றாலும் மறைக்க முடியாது. சதிகளால் சறுக்கலுக்கு உள்ளான சமூகநீதி, கிரகணத்தை விலக்கி ஒளிவிட ஆயத்தமாகி வருவதை அறிந்து கொள்ள முடிகிறது.

மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி,  வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும்,  மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Wish Diwali 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->