நாளை புயல்! ஆலோசனையில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்!
Fangal Cyclone CM Stalin meet
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 11:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளைபுயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், தபோது தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முன்னெச்சரிக்கையாக சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்து வருகிறது.
தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் மு க ஸ்டாலின் இந்த ஆலோசனையை நடத்தி வருகிறார்.
ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
English Summary
Fangal Cyclone CM Stalin meet