சாவர்க்கரை எதிர்ப்போர் தேச வரலாறு தெரியாதவர்கள் - ஆளுநர் தமிழிசை.! - Seithipunal
Seithipunal


சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை எதிர்ப்போர், தேச வரலாறு தெரியாதவர்கள் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது ஆளுநர் தமிழிசை தெரிவித்தாவது,

"நம் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக நாளை (ஆக. 6) பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். புதுவையில் சுதந்திர தினவிழாவை சிறப்பாக எடுத்துச் செல்கிறோம். 

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தில், அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை கொடுத்து கொண்டாடுவோம்.

புதுச்சேரி தியாகப் பெருஞ்சுவற்றில் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் நினைவு பெயர் பலகையை பதித்ததற்கு, சிலர் பிரச்சினை செய்கின்றனர். இதில் அரசியல் வேண்டாம்.  

அந்தமான் சிறையில் 10 ஆண்டுகள் சாவர்க்கர் தனிமை சிறையிலிருந்து நாட்டுக்காக போராடியிருக்கிறார். சாவர்க்கர் படிக்கும்போதே சுதந்திர கனலை ஏற்றியிருக்கிறார். 

அவரை எதிர்ப்பவர்கள், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்தமான் தனிமை சிறையில் ஒரு நாள் இருப்பார்களா? 

சுதந்திர போராட்ட வீரர் சாவக்கரை எதிர்ப்பவர்கள், தேச வரலாறு தெரியாதவர்களாக இருப்பார்கள்" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Tamilisai say about savarkar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->