இர்பான் மீது நடவடிக்கை இல்லையா? பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனைக்கு தடை!
Irfan video issue
தனியார் மருத்துவமனையில் தனது மனைவியின் பிரசவத்தின் போது, குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்பான் வெட்டிய காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், யூடியூபர் இர்பான் விவகாரத்தில் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
அதன்படி, அந்தப் தனியார் மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த தனியார் மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது குறித்த எந்த தகவலையும் அமைச்சர் தெரிவிக்கவில்லை. அவருக்கு மன்னிப்பு கிடையாது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தனியார் மருத்துவமனை மீது மட்டும் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்து இருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.