#BigBreaking || கோவை மாநகராட்சியை கைப்பற்றியது யார்? சற்றுமுன் முடிவு வெளியானது.! - Seithipunal
Seithipunal


கோவை மாநகராட்சி திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் தற்போது 55 வார்டுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் திமுக கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்று கோவை மாநகராட்சி கைப்பற்றியுள்ளது.

திமுக 39 வார்டுகளிலும் 
காங்கிரஸ் கட்சி ஆறு வார்டுகளிலும் 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று வார்டுகளிலும் மதிமுக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமாக திமுக கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்று, கோவை மாநகராட்சி கைப்பற்றியுள்ளது. 

அதே சமயத்தில் அதிமுக மூன்று வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக,  நாகர்கோவில், தஞ்சை, சிவகாசி, சென்னை, ஈரோடு, திண்டுக்கல், ஆவடி, கரூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது.

மேலும், கும்பகோணம், சேலம், சிவகாசி, திண்டுக்கல், தஞ்சை, கரூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், கடலூர், திருச்சி மாநகராட்சிகள் திமுக வசமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai election result 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->