திமுக+ 34, பாஜக+ 5, அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த கணிப்பு.!!
Loyola College former students election survey
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் அவ்வப்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தமிழ்நாட்டை ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் லயோலோ கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கணிப்பின்படி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 43 முதல் 49 சதவீத வாக்குகள் பெறும் எனவும், பாஜக தலைமையிலான கூட்டணி 19.5 முதல் 24 சதவீதம் வரை வாக்குகள் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அதிமுக தலைமையிலான கூட்டணி 16 முதல் 20% நாம் தமிழர் கட்சி 6.8 முதல் 12 சதவீதமும் பிற கட்சிகள் 2.5 முதல் 4 சதவீத வாக்குகள் பெறும் என லயோல கல்லூரி முன்னாள் மாணவர்கள் கணித்துள்ளனர்.
அதேபோன்று வெற்றி வாய்ப்புகள் குறித்தான கருத்துக்கணிப்பு முடிவில் திமுக 30 முதல் 34 தொகுதிகளும், பாஜக அதிகபட்சம் 5 தொகுதிகளும் அதிமுக அதிகபட்சம் ஒரு தொகுதியும் வெற்றி பெறும் என லயோலோ முன்னாள் மாணவர்களின் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 13 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த கருத்துக்கணிப்பு வரும் நாட்களில் தலைகீழாக மாறலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Loyola College former students election survey