பிரதமர் மணிப்பூரை பற்றி பேசட்டும் - மணிப்பூர் காங்கிரஸ் எம். பி. பிமோல் அகோய் மக்களவையில் கர்ஜனை..!!
Manipur Congress M P Bimol Akoi Slams PM Modi On Manipur Violence
நேற்று மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ள எம். பி. பிமோல் அகோய் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், "மணிப்பூரில் ஒரு அமைச்சரை வீழ்த்தி ஒரு சாதாரண மனிதனான நான் இங்கு வந்துள்ளேன். மணிப்பூர் மக்களின் கோபம் தான் நான் இங்கு வர காரணம். சுமார் 60 ஆயிரம் மக்கள் மணிப்பூரில் இன்னமும் முகாம்களில் தங்கியுள்ளனர்.
சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வரும் மக்களின் அவஸ்தைகள் குறித்து ஜனாதிபதி உரையில் கூட ஒரு வார்த்தை கூறவில்லை. உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். இது தான் நீங்கள் மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு செய்யும் நியாயமா?
அங்கு வீடற்று நிற்கும் ஏராளமான பெண்கள், தாய்மார்கள், சிறுமிகள் மற்றும் விதவைகளைப் பற்றி கொஞ்சம் கூட இந்த அரசுக்கு அக்கறை இல்லையா? பிரதமர் ஏன் மணிப்பூர் கலவரம் குறித்து பேச மறுக்கிறார்?
பிரதமரை மணிப்பூர் பிரச்சினை குறித்து பேச சொல்லுங்கள். நான் அமைதியாகி விடுவேன். எங்கள் மக்களின் ஒட்டுமொத்த கோபமாக நான் இங்கு இருக்கிறேன்" என்று ஆவேசமாக பேசினார். மணிப்பூர் காங்கிரஸ் எம். பி. பிமோல் அகோய் ஜே. என். யூ பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மணிப்பூரில் பாஜக அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
English Summary
Manipur Congress M P Bimol Akoi Slams PM Modi On Manipur Violence