நீங்கள் செய்தால் தவறில்லை..ஓபிஎஸை நேரடியாக தாக்கிய நவநீதகிருஷ்ணன்.!
Navaneetha Krishnan speech about ops and eps
திமுக செய்தி தொடர்பு செயலாளரும், எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி, பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மாநிலங்களவைக்கு புதிதாக சென்றபோது பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது டி கே ரங்கராஜன் மற்றும் கனிமொழி ஆகியோர் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர். ஒரு முறை மத்திய அமைச்சருடன் சண்டை போட நேரிட்டபோது கனிமொழி தான் என்னை சமாதானப்படுத்தினார் என்று கூறினார்.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்பி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நவநீத கிருஷ்ணன், "கனிமொழி குறித்து நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற போது ஓபிஎஸ் அண்ணன் அந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். இதேபோல் எடப்பாடி தாயாரும் ஓபிஎஸ் மனைவியும் காலமான போதும் ஸ்டாலின் துக்கம் விசாரிக்கச் சென்றார். அரசியலில் இது போன்ற நிகழ்வுகள் நாகரீகமானவை. அதை தான் நானும் செய்தேன். என் மீதான கட்சி தலைமையின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Navaneetha Krishnan speech about ops and eps