வெட்கமாக இல்லையா பிரதமரே?-காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி..! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு எதிராக செயல்படும் குற்றங்களில், குற்றவாளிகளை ஆதரிப்பது குறித்து பெண்களிடம் பா.ஜ.க-வின் அற்ப மனநிலையை  வெளிச்சம் போட்டு  காட்டுவதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பிரதமருக்கு கேள்வியை எழுப்பியுள்ளார்.

கடந்த 2002ல் குஜராத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை, வன்முறை கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமில்லாமல், மேலும் அப்பெண்ணின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அக்கும்பல் கொன்றது. 

இந்த வழக்கில் 11 பேர் கைது செய்தா நிலையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 11 பேரையும் குஜராத் அரசு கடந்த ஆக.,15ம் தேதி விடுதலை செய்தது. இதற்காக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்ததாவது: 

உன்னாவ் பலாத்கார வழக்கில் பா.ஜ.க  எம்எல்ஏ-வை காப்பாற்றுவது, கதுவா சிறுமி பலாத்கார வழக்கில் பலாத்காரம் செய்தவனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பலாத்காரம் செய்தவனுக்கு அரசு ஆதரவாக இருப்பது, குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் பலாத்காரம் செய்தவர்களை விடுதலை செய்து கொண்டாடுவது, குற்றவாளிகளை ஆதரிப்பது எல்லாம் பெண்களை பற்றிய பா.ஜ.க வின் கீழ்த்தரமான எண்ணங்களையே குறிக்கிறது. இதுபோல் அரசியல் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா பிரதமரே?. என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul kanthi asked question at birathamar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->