கோவையில் மாபெரும் கலைஞர் நூலகம், அறிவியல் மையம் - முதல்வர் மு.க ஸ்டாலின் அடிக்கல்! - Seithipunal
Seithipunal


2 நாட்கள் பயணமாக கோவை சென்று உள்ள  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று 8 தளங்களுடன் கூடிய  மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கோவைக்கு 2 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்று உள்ளார். இந்த நிலையில், 2வது நாளான இன்று, கோவை மாவட்டம், அனுப்பார் பாளையம் பகுதியில் ரூ.300 கோடி ரூபாய் மதிப்பில், 8 தளங்களுடன் கூடிய  மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைய உள்ள இந்த நூலகம் கிட்டத்தட்ட 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது. அடிக்கல் நாட்து விழாவிற்கு பின்னர்,  நூலகம் மற்றும் அறிவியல் மையம் குறித்த மாதிரிகள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியில், பல்வேறு துறை சார்ந்த செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான கல்லுரி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக கோவையில் அமைய உள்ள செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A huge kalaignar library science center in coimbatore chief minister mk stalin foundation stone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->