"முதல்வர் மகனால் உயிருக்கு ஆபத்து." பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த சஞ்சய் ராவத்.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சிவசேனா கட்சியுடைய இரு பிரிவினருக்கு இடையில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகின்றது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பிரிவாக தேர்தல் ஆணையம் ஆனது அங்கீகரித்தது.

இந்த அங்கீகாரத்தை எதிர்த்து தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றார். இத்தகைய நிலையில், சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் ஒரு பரபரப்பான கருத்தை கூறியுள்ளார்.

தானே காவல்துறை ஆணையருக்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், "ஏக் நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் தன்னை கொலை செய்ய கூலிப்படையை ஏவி பேரம் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஏக் நாத் ஷிண்டேவின் ஆட்சி அமைந்த பின் எனக்கு கொடுக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால், இது பற்றி நான் இதுவரை புகார் கொடுக்கவில்லை. மாநிலத்தில் நிகழும் சூழலால் இந்த விஷயத்தை இப்போது கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanjay Raut blames Srinath shinte


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->