கலைஞர் கருணாநிதியின் 8 அடி முழு உருவ சிலை.. ஈரோடு கள்ளிப்பட்டியில் திறந்து வைத்த முதல்வர்.!
Stalin Opens up Karunanithi statue In erode kallippatti
திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொங்கு மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் சிறு குறு தொழில் துறை மண்டல மாநாட்டை துவங்கினார்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது கோவையில் அமைக்கப்பட்டு இருக்கும் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தினை காணொளி காட்சியின் மூலமாக ஸ்டாலின் துவங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டம், தமிழக வர்த்தக வரவுகள் தள்ளுபடி செயல்முறை தளம் உள்ளிட்டவற்றையும் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
பின்னர், கோவை மாவட்டம் சொலவம்பாளையம் பகுதியில் தொழிற்பேட்டை மற்றும் சேலத்தில் பொது வசதி மையம் அமைக்கவும் அடிக்கல் நாட்டியுள்ளார். அந்த வரிசையில் ஈரோடு மாவட்டத்தில் கள்ளிப்பட்டி பகுதியில் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலையை நேரில் சென்று ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சிலை எட்டு அடி உயரத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்டது.
English Summary
Stalin Opens up Karunanithi statue In erode kallippatti