அடுத்த விக்கெட் காலி! "...தா, ...மா" னு திட்டுவாரு..! பாஜக ஐடிவிங் மாநில செயலாளர் "திலீப் கண்ணன்" ராஜினாமா..!!
TN BJP IT Wing State Secretary Dilip Kannan resigns from party
தமிழக பாஜக ஐடிவிங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் நேற்று தமிழக பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்கு காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக ஐடிவிங் மாநிலச் செயலாளரும், கன்னியாகுமரி பெருங்கோட்டை பொறுப்பாளருமான திலீப் கண்ணன் தமிழக பாஜகவில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம்,
ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார். தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார். தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார்.
அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை. அடுத்து பேராசிரியர் சீனிவாசன் மாநில பொதுச்செயலாளர் மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள் அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு. தன்னைவிட அறிவாளியான பேராசியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை.
அடுத்து பொன்.பாலகணபதி மாநில பொதுச்செயலாளர் அவருக்கு சின்ன பிரச்சினை வருது அக்கா சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்ற போது அந்தக்காவை தடுத்து பொன்.பாலகணபதியை அசிங்கப்படுத்தினார். அடுத்து நைனார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை.
மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு ....தா ....மா என்று போலீஸ் தோரணையில் ஏளானமாக பேசுவது. இவர் வந்து தான் எல்லாம் கிழிச்ச மாதிரி எல்லாம் கம்பு சுத்துறானுங்க இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான்.
பாஜக தொண்டனை கைது செய்துவிட்டார்கள்னு செய்தி அனுப்பினால் அவன் ஏன் இப்படி பதிவு போட்டான்னு திருப்பி கேள்வி கேட்கிறது அவனுக்கு எந்த சட்ட உதவியும் செய்கிறது இல்ல. சட்ட உதவி செய்கிறவனை ஏன் செய்கிறனேனு மிரட்டல் விடுறது. இந்த சங்கிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கு எவனையாது தூத்தனும்ணா மொத்தமா தூத்துறது அவன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான் அவன் உழைப்பு என்ன இப்பேர்பட்டவன் எப்படி திடீர்னு பேசுறான் இவனே இப்படி பேசுறான்ன இவன் என்ன செய்தார்கள் என்று ரெண்டு பக்கமும் யோசிக்க மாட்டானுங்க.
பாஜக தலைவராக அண்ணன் முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார். அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?? சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பார்ப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரெட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல.
நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும், வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பகளுக்கு அவர் புனிதராக தான் தெரிவார். இன்னும் இந்த வார் ரூம் கோஸ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.
இந்த சங்கிகளுக்கு ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன். எப்படியும் என்ன திட்டுவிங்க அதுக்கு முன்னாடி ஒரு தீவிர வெறிபிடிச்ச சங்கியே இப்படி போறானே இவனுங்க எந்தளவுக்கு கேவலமா இருக்கானுங்கனு கொஞ்சமாது யோசிச்சி பாருங்க. இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்க்கு 100% உழைத்திருக்கேன். என்னை எப்படியும் திட்டி தீர்பீர்கள் அதற்க்கு முன்னால் ஒரு சித்தாந்தவாதியே இப்படி போறானே தவறு எங்கே நடக்குதுனு ஒரு முறை யோசிச்சிட்டு திட்டுங்க. இத்தனை காலம் என்னோடு பயனித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
TN BJP IT Wing State Secretary Dilip Kannan resigns from party