இசைவாணியை கைது செய்ய கூடாது! அந்த கோரிக்கை தவறானது கண்டிக்கத்தக்கது - திருமாவளவன் பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்து கடவுள் ஐயப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடிய விவகாரத்தில் இசைவாணியை கைது செய்யவேண்டும் என்று, பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன்  தெரிவிக்கையில், "அந்த பாடல் மதத்தை அல்லது மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் பாடப்பட்டதல்ல. 

ஐயப்பன் திருக்கோயிலில் பெண்களின் நுழைவு குறித்து எழுந்த சர்ச்சையின்போது, அது பெண்ணிய குரலாகவும், பெரியாரின் சிந்தனையை முன்வைக்கும் இசையாகவும் வெளிப்பட்டது. 

அதில் எந்த விதமான மத உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற விஷயங்களை பெரிதுப்படுத்துவதன் மூலம் அதானி போன்ற முக்கிய பிரச்சினைகளை திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள். 

அதானி கைது செய்ய வேண்டும் என்பது தற்போது தேசிய அளவில் வலியுறுத்தப்படும் கோரிக்கையாக மாறியுள்ளது. இத்தகைய சிறு பிரச்சினைகளை முக்கியமாக எடுத்துக்கொண்டு திசைதிருப்புவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. 

மேலும், இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இது நிலைமைக்கு தீர்வாக அனைத்து தரப்பினரும் விவாதங்களை சமநிலையுடன் அணுகவேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan say about isaivani issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->