மதுபோதையில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட பெண் - கரூரில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மது போதையில் தகராறில் ஈடுபடுவது அதிகரித்து விட்டது. போதை ஆசாமிகள் போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வம்பிழுக்கிறார்கள். அதன்பின்னர் மன்னிப்பு கேட்கிறார்கள். 

இந்த நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே நேற்று காலை பெண் ஒருவர் மதுபோதையில் சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி அங்குவந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், அந்த பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் என்பதும், ஒருவர் அவரிடம் ரூ.5 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி சென்றதாகவும், அந்த பணத்தை மீட்டு தரக்கோரி ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கரூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drunk women fight with police in karoor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->