புதிய அப்டேட்டுகளை வெளியிட்ட வாட்ஸ் ஆப் - என்னனு தெரியுமா? - Seithipunal
Seithipunal


புதிய அப்டேட்டுகளை வெளியிட்ட வாட்ஸ் ஆப் - என்னனு தெரியுமா?

பிரதான சமூக வலைத்தளங்களில் ஒன்று வாட்ஸ் ஆப். இந்த வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் பாதுகாப்பு அம்சங்கள், தனியுரிமை, துரிதம், நவீன மேம்பாடு உள்ளிட்டவைக்காக அவ்வப்போது மெட்டா நிறுவனம் அப்டேட்டுகளை வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் வாட்ஸ் ஆப்பில் முக்கியமான அப்டேட் என்னவென்றால், விண்டோஸ்க்கான வாட்ஸ் ஆப் உபயோகத்தில் வீடியோ கால் பேசும் வசதிக்கானது.

இதற்கு முன்னதாக வாட்ஸ் ஆப் வீடியோ காலில் 8 பேருடன் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். தற்போது அந்த எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதாவது அதிகபட்சமாக 32 பேருக்கு ஒரே நேரத்தில் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ள இயலும். வீடியோ கால் மட்டுமன்றி ஆடியோ கால் வசதியும் 32 பேர்களுடன் மேற்கொள்ள முடியும்.

மேலும், வாட்ஸ் ஆப் அழைப்புகளில் முன்பின் அறியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை இனி தாமாக மௌனிக்கச் செய்யவும் முடியும். இந்த வசதியை ’ஸ்பாம் கால்’ என்ற வாட்ஸ் ஆப் அழைப்புகளால் அதிக தொந்தரவுகளுக்கு ஆளாவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதற்கு செட்டிங்ஸ் பகுதியில் மாற்றங்களை செய்வதன் மூலமாகவே பயன் பெறலாம். அதன் பின்னர், முன்பின் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள், நம்மை தொந்தரவு செய்யாமல் தாமாக அமைதியில் ஆழ்ந்து விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meta company intro new update on whatsapp


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->