கடினமான சூழ்நிலைகளிலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய ராசிகாரர்களே.! 2022 ஆங்கில வருட ராசிபலன்கள்.!
2022 simam Rashipalankal
2022ஆம் வருடமானது சிம்ம ராசி அன்பர்களுக்கு மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்களை உண்டாக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படுதல் நல்லது.
பொருளாதாரம் :
பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருப்பது சேமிப்பை மேம்படுத்தும். தேவையற்ற பயணங்கள் மற்றும் புதிய முயற்சிகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு எதிர்பாராத சில உதவிகளின் மூலம் செய்கின்ற முயற்சிகளில் மாற்றமும், உத்வேகமும் ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவுகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோக பணிகளில் மெத்தன போக்கு இன்றி செயல்படவும். சக ஊழியர்களின் மீதான பொறாமையை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்திருந்த சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எண்ணிய இலக்கை அடைய இயலும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த சோர்வும், மந்தத்தன்மையும் படிப்படியாக குறையும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் வாக்கு சாதுர்யத்தின் மூலம் மேன்மை அடைவீர்கள். செய்கின்ற முயற்சிகளுக்கேற்ப எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் இருந்து முடிவெடுக்காமல் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது.
நன்மைகள் :
குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளும், வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளும், உறவினர்களின்; மூலம் அனுகூலமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய வருடமாக இந்த புத்தாண்டு அமையும்.
கவனம் :
உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளிலும், எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளிலும், நீண்ட நேரம் கண் விழித்து செயல்படுவதிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும் பிரத்யங்கிரா தேவியை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும்.