தினம் ஒரு திருத்தலம்... இரவு நேர அம்பாள் திருமணம்... ஜடாமுடி சிவபெருமான்...!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் :

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க.

கோயில் எங்கு உள்ளது :

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு என்னும் ஊரில் அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்புகள் :

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க குரல் கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும்.

இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டுள்ளது.

வேறென்ன சிறப்பு :

கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம். சிவபெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். இவரின் ஜடாமுடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51வது தேவாரத்தலம் ஆகும்.

உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.

எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

திருவிழாக்கள் :

மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் 'சப்தஸ்தானம்" திருவிழா கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனைகள் :

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்கள் :

அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arulmigu aiyarappar temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->