அதிர்ஷ்டத்தை நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைத்துக்கொள்ள... இதை ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


மகாலட்சுமி நம் வீட்டில் அதிர்ஷ்ட தேவதையாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டியவை:

உழைப்பால் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் உயர்ந்து நல்ல நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லையே என ஆதங்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திறமையுள்ளவராகவும், கடும் உழைப்பாளியாகவும் இருந்தாலும் கூட அதிர்ஷ்டத்தின் மீது சிறிதளவாவது நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

அந்த அதிர்ஷ்டத்தை நம் வசப்படுத்தவும், நம் வீட்டிலேயே நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ளவும் நம்மால் முடியும்... அது எப்படி? என்று பார்க்கலாம்...!!

அதிர்ஷ்டத்தை நம் வசப்படுத்தி, நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைத்துக்கொள்ள, நமக்கு கை கொடுக்கும் வழிபாடு என்றால் அது மகாலட்சுமி வழிபாடுதான். மாகாலட்சுமி வழிபாட்டை முறையாக செய்தால், அந்த வீட்டில் அதிர்ஷ்ட தேவதை ஐக்கியமாகி விடுவாள். 

மகாலட்சுமி வழிபாட்டை எப்படி செய்யலாம்?

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால், எல்லோருடைய வீடும் சுத்தமாகவும், மங்களகரமாகவும் தான் இருக்கும். அப்படிப்பட்ட மங்களகரமான வெள்ளிக்கிழமை அன்றோ... அல்லது பௌர்ணமி தினத்திலோ இந்த பூஜையை செய்யலாம். 

மகாலட்சுமி பூஜை செய்ய பூஜை அறையில், அதிர்ஷ்ட லட்சுமியான மகாலட்சுமியின் இந்த திருவுருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதாவது ஆந்தையுடன் கையில் கலசத்தை ஏந்தி வைத்திருக்கும் திருவுருவப்படம் அதிர்ஷ்ட தேவதை என்று கூறுகின்றனர். இந்த படம் இருக்கும் வீட்டில் நிச்சயம் அதிர்ஷ்டம் இருக்கும்.

வழிபடும் முறை :

மகாலட்சுமியின் திருவுருவப்படத்தை கிழக்கு பார்த்தவாறு வைத்துவிட்டு, படத்திற்கு முன்பாக ஒரு சிறிய கலச சொம்பில் பச்சரிசியை நிரப்பி விட வேண்டும்.

பச்சரிசியின் மேலே 9 குண்டு மஞ்சளை அடுக்கி வைத்து, அந்த மஞ்சளுக்கு சந்தனமும், ஜவ்வாதும், குங்குமமும் இட வேண்டும்.

அதன் பின்பு வாசனை மிகுந்த பூக்களால் இந்த கலச சொம்பிற்கு 108 முறை 'ஓம் மகாலட்சுமியை நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

உதிரி புஷ்பங்கள் கிடைக்காதவர்கள் தாழம்பூ குங்குமம் என்று சொல்லப்படும், வாசனை நிறைந்த குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம். ஒரு வெற்றிலையின் மீது அர்ச்சனை செய்துவிட்டு அந்த குங்குமத்தை தினந்தோறும் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொண்டால் வீட்டில் அதிர்ஷ்டமும், ஐஸ்வர்யமும் நிலைத்திருக்கும்.

இந்த பூஜையை தொடர்ந்து இத்தனை நாட்கள் தான், இத்தனை வாரங்கள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் செய்யலாம்

பலன்கள் :

வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும்.

சந்தோஷம் அதிகரிக்கும்.

வறுமை நீங்கும்.

செல்வ செழிப்போடு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Friday fasting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->