தீராத வினைகள் தீர.. அஜா ஏகாதசி (அ) அஸ்வதமேத யாகம்.. விஷ்ணுவின் பரிபூரண அருளை பெற செய்யவேண்டியது.!
purattasi ashwametha yegadhasi 2022
ஏகாதசி விரதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்ததும், பகவான் விஷ்ணுவின் அருளை பெற்று தருவதும் என்பது அனைவரும் அறிந்தது தான்...
அத்துடன் ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான பலன்களை கொடுக்கக்கூடியது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் அதுவும், தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி நம்முடைய தீவினைகளை நீக்கி அருளக்கூடியது.
புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா ஏகாதசி என்று பெயருண்டு. இதனை அன்னதா ஏகாதசி என்றும் கூட சிலர் குறிப்பிடுவர். அஜா ஏகாதசி என்றால் மன வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்.
இந்நாளில்விரதம் இருந்து ஸ்ரீஹரியை வழிபட்டால், அவர் பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபட்டிடுவார் என்று புராணம் சொல்கிறது.
முன்வினை பாவங்களை நீக்கும் அஜா ஏகாதசி விரதம் நாளை (21.09.2022) புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
அஜா ஏகாதசி விரதமுறை :
இந்த அஜா ஏகாதசி திருநாளில் விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பின் பகவான் விஷ்ணுவை மனதில் இருத்திக்கொண்டு வழிபட வேண்டும்.
அன்று முழுதும் உணவு உண்ணா நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு. உடல்நலம் சரியில்லாதவர்கள் மட்டும், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும் நேரத்தில் குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஆதலால் அவ்வப்போது குளிர்ந்த நீர் பருகலாம்.
அன்று நாள் முழுவதும் பகவான் நாமத்தை ஜெபித்துக்கொண்டே அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
விரதம் இருக்க முடியாத பட்சத்தில் அஜா ஏகாதசி கதையையும் அதன் பலனையும் மற்றவருக்கு எடுத்து கூறுவதன் புண்ணியம் பெறுகிறார்கள்.
இந்த நாளை தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.!
English Summary
purattasi ashwametha yegadhasi 2022