ஐசிசி ரேங்க்! பாபரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கில்!  - Seithipunal
Seithipunal



சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் 830 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இதுவரை முதலிடத்தில் இருந்துவந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா வீரர் குவின்டன் டி காக் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் 5வது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா வீரர் வான் டெர் டுசன் 7வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 8வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 10வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 18-வது இடத்திலும், கேஎல் ராகுல் 24-வது இடத்திலும் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Ranking Shubman Gill 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->