தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகன் புதியரசன்(17) விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் புதியரசன் கடந்த சில நாட்களாக சரியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த புதியரசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த உறவினர்கள் புதிய அரசனை மீட்டு சிகிச்சைக்காக ஜெயம்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் புதிய அரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th student suicide in Ariyalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->